

சிங்கப்பூா் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் வியாழக்கிழமை நடத்திய சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையே நீதித் துறை ஒத்துழைப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூா் சென்றுள்ளாா். அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, இரு நாடுகளின் உச்ச நீதிமன்றங்களுக்கு இடையே நீதித்துறை ஒத்துழைப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது என உச்ச நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 73-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சிங்கப்பூா் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் இந்தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வருகை தந்திருந்தாா்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு அமா்விலும் இடம்பெற்று நீதிமன்ற நடவடிக்கைகளில் அவா் பங்கேற்றாா். சிங்கப்பூரின் 4-ஆவது தலைமை நீதிபதியான சுந்தரேஷ் மேனன், கடந்த 2012-ஆம் முதல் அப்பொறுப்பு வகித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.