
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிஐடி காவல்துறையினரால், தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கையைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடக்கலாம் என்ற அச்சத்தில், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து ஆந்திரம் செல்லும் பேருந்துகள், இரு மாநில எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் பக்தர்களும், திருப்பதியிலிருந்து தமிழகம் திரும்ப வேண்டிய பக்தர்களும், பேருந்துகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க..சென்னிமலை அருகே வயதான தம்பதி கொலை; ஒரு வாரம் முன்பு இறந்த வளர்ப்புநாய்
தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பாதுகாப்பு கருதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு: தட்டுகளை அலங்கரிக்கும் மசால் தோசை உள்பட 500 வகை உணவுகள்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...