
நாட்டின் பெயரை மாற்ற மாட்டோம், பிரதமரை மாற்றுவோம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிரத்தில் இன்று நடந்த பேரணியில் அவர் பேசியதாவது, சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் வெற்றியடைந்ததால் மத்தியில் ஆளும் கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது. இந்திய கூட்டணியால் அவர்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.
அதனால்தான் அவர்கள் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றியுள்ளனர. இதுபோன்ற பெயர் மாற்ற விளையாட்டுகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம். அடுத்த மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியையும் நாட்டின் பிரதமரையும் மாற்றுவோம். 2024 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது.
'இந்தியா', 'பாரத்' அல்லது 'ஹிந்துஸ்தான்' அனைத்தும் நமது பெயர்கள். நாங்கள் விரும்பும் பெயரை பயன்படுத்துவோம். அதை யாரும் எங்கள் மீது திணிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.