பிகாரை அச்சுறுத்தும் டெங்கு: ஒரே நாளில் 134 பேருக்கு பாதிப்பு!

பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 675 ஆக உயர்ந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 675 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த சில மாதங்களாக பிகாரை அச்சுறுத்திவரும் டெங்கு பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகின்றது. மாநிலத்தில் பாட்னா மற்றும் பாகல்பூரில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பாகல்பூரில் 300 பேருக்கும், பாட்னாவில் 298 பேருக்கு டெங்கு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த இரு மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பிகாரின் 38 மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை பதிவான 134 பாதிப்புகளில் 21 வழக்குகள் பாகல்பூரில் பதிவாகியுள்ளது. டெங்கு பாதித்தவர்களுக்கு மாயாகஞ்ச் ஜேஎல்என் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு அமைத்துள்ளது. தற்போது 74 பேர் மாயாகஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், பாட்னா மாவட்ட நிர்வாகம் கால் சென்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளது மற்றும் டெங்கு நோயாளிகளுக்கு ஹெல்ப்லைன் எண்கையும் வழங்கியுள்ளது. மேலும் மக்கள் ரத்த தானம் செய்யுமாறும் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com