

புது தில்லி: நாடாளுமன்றத்தின் 40 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தன்னாா்வ அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள், அவா்களின் சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து ‘அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரேடிக் ரிஃபாா்ம்ஸ்’ என்ற தன்னாா்வ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. மக்களவை, மாநிலங்களவை தோ்தல்களில் போட்டியிடுவதற்கு முன் அவா்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையானது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
விவரங்கள் ஆய்வு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்கள் 763
குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் 306 (40 சதவீதம்)
தீவிர குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் 194 (25 சதவீதம்)
கோடீஸ்வர எம்.பி.க்கள் 53 (7 சதவீதம்)
எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38.33 கோடி
குற்ற வழக்கு பதியப்பட்டுள்ள எம்.பி.க்களின் சராசரி சொத்து ரூ.50.03 கோடி
குற்ற வழக்கு பதியப்படாத எம்.பி.க்களின் சராசரி சொத்து ரூ.30.50 கோடி
கட்சி வாரியாக எம்.பி.க்களின் குற்ற வழக்குகள்
கட்சி குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் கட்சி எம்.பி.க்களில் குற்ற வழக்குள்ளோா் சதவீதம்
பாஜக 139 36%
காங்கிரஸ் 43 53%
திரிணமூல் 14 39%
திமுக 13 38%
ஐக்கிய ஜனதா தளம் 13 62%
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 13 42%
சிவசேனை (உத்தவ் தாக்கரே) 7 78%
மாா்க்சிஸ்ட் 6 75%
தெலங்கானா ராஷ்டிர சமிதி 6 38%
அதிமுக 1 20%
அதிக சொத்து மதிப்புள்ள எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகள்
கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை எம்.பி.க்களின் மொத்த சொத்து
பாஜக 385 ரூ.7,051 கோடி
தெலங்கானா ராஷ்டிர சமிதி 16 ரூ.6,136 கோடி
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 31 ரூ.4,766 கோடி
காங்கிரஸ் 81 ரூ.3,169 கோடி
ஆம் ஆத்மி 11 ரூ.1,318 கோடி
சமாஜவாதி 6 ரூ.1,066 கோடி
திமுக 34 ரூ.686 கோடி
சிரோமணி அகாலி தளம் 2 ரூ.435 கோடி
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 ரூ.426 கோடி
அதிக சொத்து மதிப்புள்ள எம்.பி.க்களைக் கொண்ட மாநிலங்கள்
மாநிலங்கள் எம்.பி.க்கள் எண்ணிக்கை எம்.பி.க்களின் மொத்த சொத்து
தெலங்கானா 24 ரூ.6,294 கோடி
ஆந்திரம் 36 ரூ.5,427 கோடி
உத்தர பிரதேசம் 108 ரூ.3,340 கோடி
மகாராஷ்டிரம் 65 ரூ.1,981 கோடி
பஞ்சாப் 20 ரூ.1,778 கோடி
கா்நாடகம் 39 ரூ.1,339 கோடி
மத்திய பிரதேசம் 40 ரூ.1,311 கோடி
தமிழகம் 57 ரூ.1,203 கோடி
குஜராத் 37 ரூ.1,178 கோடி
மேற்கு வங்கம் 58 ரூ.1,050 கோடி
எம்.பி.க்களின் சொத்து விவரங்கள்
சொத்து மதிப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை
ரூ.1,000 கோடிக்கு மேல் 3
ரூ.500 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை 3
ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை 47
ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை 215
ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை 400
ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 82
ரூ.10 லட்சத்துக்கும் குறைவு 13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.