
கோப்புப்படம்
அனந்த்நாக் மாவட்டத்தில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சுற்றிவளைத்ததாக தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. அதில், கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோனக் மற்றும் டிஎஸ்பி ஹுமாயூன் பட் ஆகிய மூவரும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
இதற்கு காரணமாக இருந்த உரைன் கான் உள்ளிட்ட 2 லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர் என காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
படிக்க: அதிகரிக்கும் டெங்கு: மதுரையில் ஒரே வாரத்தில் 37 பேர் பாதிப்பு!
புதன்கிழமை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் உள்ள கடோல் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் 19 ராஷ்டிரிய ரைபிள்ஸின் கமாண்டிங் அதிகாரி, மேலும் ஒரு முக்கிய அதிகாரி மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...