
கோப்புப் படம்
மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு அதிகமாக பாதித்து வருகிறது.
மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
படிக்க: ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 உயர்வு!
ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...