தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

கொலீஜியத்திடம் சரியான தரவுகள் இல்லை என்பது தவறு: தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான உண்மைத் தரவுகள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை

‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான உண்மைத் தரவுகள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது தவறான கருத்து’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

தில்லியில் நடைபெற்ற ராம் ஜெத்மலானி நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி இதுகுறித்து மேலும் பேசியதாவது:

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான தரவுகளுக்காக விரிவான ஆய்வுத் தளத்தை உச்சநீதிமன்றம் தயாரித்திருக்கிறது. அதன்மூலம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கென நாடு முழுவதிலுமிருந்து முதல்நிலையிலிருக்கும் 50 நீதிபதிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கென செயல்திறன் அளவுகோள்களை வகுக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு முன்வைக்கப்படும் ஆக்கபூா்வ யோசனைகள், அடுத்த தலைமை வரும்போது மறக்கப்பட்டுவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதை மாற்றும் வகையில், குறிப்பிட்ட பணியைச் செய்யும் அமைப்பாக மட்டும் அல்லாமல், நீதிமன்றங்களை நிறுவனமயமாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், நீதிமன்றங்களின் வெளிப்படைத்தன்மையும் பொறுப்பேற்கும் தன்மையும் மேலும் விரிவுபடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com