சில்சர் என்ஐடியில் மாணவர் தற்கொலை: வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்!

சில்சார் என்ஐடியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சில்சர் என்ஐடியில் மாணவர் தற்கொலை: வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்!
Published on
Updated on
1 min read

அசாம் மாநிலம், சில்சர் என்ஐடியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் என்ஐடியில் மூன்றாமாண்டு படித்துவந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவரது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2021-ல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஊரடங்கு என்பதால் மாணவன் ராய் வீட்டிலிருந்துள்ளார். இணைய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தவறியுள்ளார். இதன் விளைவாக முதல் செமஸ்டர் தேர்வில் ஆறு பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ராயை கல்விநிறுவனம் அவமதித்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தோல்வியடைந்த பாடங்களுக்குச் சிறப்புத் தேர்வு வைக்குமாறு நிர்வாக அதிகாரிகளிடம் ராய் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ராய் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ராயின் மரணத்தையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்கள் ராய் தங்கியிருந்த விடுதி அறையை நாசப்படுத்தியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஒரு கட்டத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி மேற்கொண்டுள்ளனர். தடியடியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து, சிகிச்சைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அதில் சில மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனநாயக ரீதியில் போராட்டம் தொடரும் என்றும் நிர்வாகத்தின் தவறான முடிவுகளால் சக தோழனை இழந்துள்ளோம். நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சில்சார் என்ஐடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com