
நரேந்திர மோடி / ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 17) தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
படிக்க | நரேந்திர மோடிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், பிறந்தநாள் தினத்தன்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...