
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) தேசியக் கொடியேற்றினார்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கஜ் துவார் என அழைக்கப்படும் நுழைவு வாயில் அருகே தேசியக் கொடியை ஏற்றினார்.
படிக்க | பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!
தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷிகாங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் செப்.18-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தொடா் முதலில் பழைய கட்டடத்தில் தொடங்கி பின்னா் புதிய கட்டடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...