

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் ஒடிசாவின் சில மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
அடுத்த இரண்டு நாள்களுக்கு மாநிலத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
புதன்கிழமை காலை 8.30 முதல் வியாழன் காலை 8.30 வரை கியோஞ்சார், மயூர்கஞ்ச், பாலசோர், பத்ரக், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில் (7 முதல் 20 செ.மீ) வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இதேபோல், ஜாஜ்பூர், கட்டாக், குர்தா, கஞ்சம், தேன்கனல், அங்குல், தியோகர், சுந்தர்கர், ஜார்சுகுடா, சம்பல்பூர், சோனேபூர், பௌத், கந்தமால் மற்றும் காலாஹண்டி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சராசரியாக 4.6 மி.மீ மழையும், அதிகபட்சமாக கியோஞ்சர் மாவட்டத்தில் ஜும்புராவில் 67.2 மி.மீ மழையும், நுவாபாடா மாவட்டத்தில் காரியாரில் 62 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.