
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து இன்று(செவ்வாய்க்கிழமை) மனு அளித்துள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தங்களிடம் தண்ணீர் இல்லை என்று கூறி காவிரி நீரை தர மறுக்கிறது.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு!
அதில், தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.