
போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)
கோட்டயம்: கேரளப் பெண்மணியுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
செப்டம்பர் 2 ஆம் தேதி நண்பகல் 12.40 மணி இருக்கும். சங்கனாச்சேரியில் உள்ள கல்லுகளம் வீட்டில் நெருங்கிய குடும்பத்தினரும் மற்றும் உறவினர்களும் கூடியிருந்தனர். அப்போது, செல்போன் ரிங் அடிக்கும் சப்தம் கேட்டதும், விடியோ அழைப்பை எடுக்கும் போது, ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
அதில், வாடிகனில் இருந்து போப் பிரான்சிஸ், தாமஸின் தாயார் சோசம்மா ஆண்டனியை (95) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, போப்பாண்டவர் இத்தாலிய மொழியில் பேசினார். அதற்கு சோசம்மா மலையாளத்தில் பதில் அளித்தார். அந்த நேரத்தில் சோசம்மாவின் பேரன் ஜார்ஜ் கூவக்கட், போப்பின் வெளிநாட்டு பயணங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.
குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள் மீது அக்கறை கொண்டவராக அறியப்பட்ட பிரான்சிஸ், சோசம்மாவின் நலம் குறித்து விசாரித்தார். அவர்கள் இருவரும் நான்கு நிமிடங்கள் பேசினார்கள். சோசம்மா மகிழ்ச்சியாக சைகை செய்தார், போப் உணர்ச்சிவசப்பட்டார்.
சோசம்மா செப்டம்பர் 2 ஆம் தேதி வந்த அழைப்பை நினைத்து கண்ணீர் விட்டார். "அவருக்காக நான் பிரார்த்தனை செய்வேன் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர் என் பிரார்த்தனை தேவை" என்று சோசம்மா கூறினார். கூவக்காட்டைப் போன்ற நம்பிக்கைக்குரிய பேரனை வளர்த்த சோசம்மாவையும் போப் பாராட்டினார்.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் ராகுல் காந்தி!
கரோனா தொற்றுநோய்தான் இந்த விடியோ அழைப்பிற்கு வழிவகுத்தது. ஜூலை 2022 இல், போப் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சோசம்மாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சோசம்மாவால் வளர்க்கப்பட்ட பேரன் கூவக்கட், தனது பாட்டியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது குறித்து கவலையடைந்திருந்தார். இதையறிந்த போப் பிரான்சிஸ் அவருக்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...