
கோப்புப்படம்
தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறார்.
நீதி வழங்கல் அமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. நாட்டில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் சட்ட நடைமுறைகள், வழக்குகளில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.
பல்வேறு சட்டத் தலைப்புகளில் உரையாடல், யோசனை, அனுபவத்தை பகிர்வதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டுள்ளது.
இந்த வழக்குரைஞர்கள் மாநாட்டில் புகழ்பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிக்க: முன்பதிவு தொடங்கியது: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் முழு விவரம்!
மேலும், உத்தர பிரதேசம் வாராணசியில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் திடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...