எத்தனை நாள்களுக்குள் 2 ஆயிரம் ரூபாயை மாற்ற முடியும்?

பணமதிப்பிழப்பின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது.
எத்தனை நாள்களுக்குள் 2 ஆயிரம் ரூபாயை மாற்ற முடியும்?


புது தில்லி: பணமதிப்பிழப்பின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்த நிலையில், அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது. மக்களின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகங்கள், இ-மின்னணு நிறுவனங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. அவையும் தற்போது அதனை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. 87 சதவீத நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், 13 சதவீத நோட்டுகள் சில்லறையாக மாற்றிக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான 2,000 ரூபாய் நோட்டு, மெல்ல புதிய நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு, புழக்கத்தில் இருந்து குறைந்து, செப்டம்பர் மாதத்தோடு இல்லாமலே போகப்போகிறது.

எனவே, மக்கள் தங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே, 97 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

வங்கி விடுமுறை நாள்கள்
குவகாத்தி, ராஞ்சி பகுதிகளில் செப்டம்பர் 25ஆம் தேதி வங்கி விடுமுறை
ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வங்கி விடுமுறை.
செப்டம்பர் 28ஆம் தேதி, சென்னை, பெங்களூரு, இம்பால், ஹைதராபாத், கான்பூர், லக்னௌ, மும்பை, புதுதில்லி, ராய்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வங்கிகள் விடுமுறை.

எனவே, உங்கள் நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த தகவல்களை அறிந்துகொண்டு, கையில் 2000 ரூபாய் இருந்தால் உடனடியாக வங்கிகளில் கொண்டு சென்று மாற்றிக்கொள்ளுங்கள். கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புக் குறைவு என்று அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com