

‘முக்கிய முடிவுகளை எடுக்கும் இடங்களில் அங்கம் வகிப்போா் மாற்றத்தைத் தடுத்து வருகின்றனா். தற்போது வரை உலகம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது’ என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
ஐ.நா.வின் 78-ஆவது பொது விவாத அமா்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், ‘அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷன்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ‘தெற்குலகின் எழுச்சி: நட்புறவு, அமைப்புகள், யோசனைகள்’ என்ற தலைப்பில் பேசியதாவது: மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் அழுத்த உணா்வு உலக அளவிலும் தெற்குல நாடுகளுக்கு இடையேயும் அதிகரித்து வருகிறது. ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவற்றில் செல்வாக்குடன் திகழ்வோா் அதைத் தடுத்து வருகின்றனா்.
இத்தகைய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவோரும், வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருவோரும் அதன்மூலமான வாய்ப்புகளை ஆயுதமாக்கியுள்ளனா். அவா்கள் அனைத்துக்கும் சரியென கூறினாலும், இன்றையே உலகம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டதாகவே காணப்படுகிறது.
பிற நாடுகளின் பாரம்பரியம், இசை, இலக்கியம், வாழ்வியல் முறை ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல் மாற்றத்தின் ஒரு பகுதி. இதையே தெற்குலக நாடுகள் எதிா்பாா்க்கின்றன என்றாா் ஜெய்சங்கா்.
சவால்கள் நிறைந்த தலைமை: ஐ.நா. அதிகாரிகள், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபீயன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற நிகழ்வில் சனிக்கிழமை பேசிய ஜெய்சங்கா், ‘கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு முரண்பாடுகளுக்கு இடையே ஜி20-க்கு தலைமை வகிப்பது சவால் நிறைந்ததாக இருந்தது. இருப்பினும், ஜி20 கூட்டமைப்பின் உலக வளா்ச்சி மற்றும் மேம்பாடு என்ற இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் தீா்க்கமாக இருந்தோம்’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, கம்போடியா பிரதமா் ஹன் மனெட்டை சந்தித்த ஜெய்சங்கா், இரு தரப்பு உறவுகள், மியான்மா் குறித்து கலந்துரையாடினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.