நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!

குஜராத்தில் கர்பா நடனப் பயிற்சியின்போது 19 வயது இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!

குஜராத்தில் கர்பா நடனப் பயிற்சியின்போது 19 வயது இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா பயிற்சி மேற்கொண்டு வந்தார் வினித் குன்வாரியா. நவராத்திரியில் விழாவில் பங்கேற்பதற்காக கர்பா நடனத்துக்கான பயிற்சியை உற்சாகமாக மேற்கொண்டு வந்த இளைஞர் திடீரென சரிந்து விழுந்தார். 

மயங்கிவிழுந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு இளைஞர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக கர்பா பயிற்சியாளர் தர்மேஷ் ரதோட் கூறுகையில், 

கடந்த இரண்டு மாதங்களாக வினித் இங்குப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். வழக்கமாக திங்கள்கிழமை உற்சாகமாக கர்பா நடனப் பயிற்சியை மேற்கொண்ட வினித் திடீரென மயங்கி தரையில் விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் பலனில்லை, வினித் மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த வாரம் இதேபோன்று ஜுனாகத் நகரில் 24 வயது இளைஞர் கர்பா நடனத்தின்போது மாரப்படைப்பால் உயிரிழந்தார்.

சௌசாரஷ்ரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த 6-வது நபர் இவராவர். 

கரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com