வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளது: இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.சோமநாத் இன்று சந்திரயான் -3 குறித்து தெரிவிக்கையில், பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :28 செப்டம்பர் 2023, 11:26 pm IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.சோமநாத் இன்று சந்திரயான்-3 குறித்து தெரிவிக்கையில், பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளதாகவும், தற்போதைய உறக்க நிலையிலிருந்து எழுந்திருக்கத் தவறினாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றார்.

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்கு சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோள் ஏவுவதற்கு விண்வெளி நிறுவனம் தயாராகி வருகிறது.

தற்போது நிலவில் உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவர் நிலை குறித்து இஸ்ரோ தலைவர் தெரிவிக்கையில், நிலவில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக அதன் மின்னணு சாதனங்கள் சேதமடையவில்லை என்றால் அது விழித்து கொள்ளும், ஏனெனில் இரவில் நிலவில் வெப்பநிலையானது மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் கீழ் உள்ளது என்றார்.

நிலவில் பகல் தொடங்கிய பிறகு சூரிய சக்தி மூலம் லேண்டரும், ரோவரும் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் எந்த சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை என்றார். 

வரவிருக்கும் திட்டங்கள் குறித்து தெரிவித்த சோமநாத், இஸ்ரோ இப்போது எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படும் என்றார். இந்த செயற்கைக்கோளானது கருந்துளைகள், நெபுலாக்கள் மற்றும் பல்சர்கள் குறித்து ஆய்வு செய்யும் என்றார்.

மேலும் இன்சாட்-3டிஎஸ் என்ற பருவநிலை செயற்கைக்கோள் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்றார் சோமநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.