ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றக் காவலில்
நீதிமன்றக் காவலில்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் நேரில் ஆஜராவதை நிராகரித்து வந்தார். இதுதொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. கேஜரிவாலின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 20-ம் தேதி அமலாக்கத்துறையினர் கேஜரிவாலின் வீட்டிற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், கேஜரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து கேஜரிவால் விசாரித்து வந்தார். கேஜரிவாலின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றக் காவலில்
இந்த 3 கேள்விகளுக்கு மோடி பதிலளிப்பாரா? ஸ்டாலின்

கேஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கேஜரிவால் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவையடுத்து திகார் சிறையில் இன்று அடைக்கப்படுகிறார்.

முன்னதாக, தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, கடந்த செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தில்லி முதல்வர் கேஜரிவாலின் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com