‘சிறை என்றாலே குற்றவாளிகள் பயப்படுகிறார்கள்’ : யோகி ஆதித்யநாத்

குற்றவாளிகள் சிறை பயம்; முதல்வர் யோகி அதிரடி கருத்து
தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்
தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்பிடிஐ

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குற்றவாளிகள் சிறைக்கு செல்வதற்கு பயப்படுகின்றனர் என முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து பேசிய முதல்வர், “அந்த பயம் குற்றவாளிகளிடம் இல்லையெனில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள். 2017-க்கு முன்பு சூரியன் மறைவதற்குள் காவல் நிலையங்களே மூடப்பட்டுவிடும். முந்தைய ஆட்சியைப் போல இந்த அரசும் இருக்கும் என குற்றவாளிகள் நினைத்தனர், ஆனால் நாங்கள் சகிப்புத்தன்மையை கொண்டிருக்கவில்லை. குற்றத்தை நிறுத்துங்கள் அல்லது அதற்கு பதில் செலுத்துங்கள். பலர் பிணை விடுத்து சிறை சென்றனர். தற்போது சிறைக்கு அனுப்பாதீர்கள் என கேட்கிறார்கள். தெருவில் அலையும் குற்றவாளிகள் வேலை செய்து உழைத்து பிழைக்கின்றனர். நாள்தோறும் உ.பி.யில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. மாநிலத்தில் அவர்களின் தொல்லை இல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இடையே உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டு அவர் பேசினார்.

முதல்வர் யோகி, “கேரளாவில் உள்ள இடதுசாரிகள் காங்கிரஸுடன் இணைவதில்லை. அதே நிலைதான் மகாராஷ்டிராவிலும் உள்ளது. அவர்களால் பொருத்தமான வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்ல. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சமாஜ்வாதியிலும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் காங்கிரஸிலும் இணைகிறார்கள். மேற்கு வங்கத்தில் கூட்டணி கட்சியான திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com