100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தில்லியில் இன்று வெளியிட்டார்.

அதில்,

• குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்"

• நுழைவுத் தேர்வுகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்''

• 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"

• 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தப்படும்"

• புதுச்சேரி மற்றும் தில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்"

• பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும.

• சுகாதாரம், கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

• கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com