
பாஜக முன்னாள் துணைத் தலைவரான லேகாஸ்ரீ சமந்தசிங்கர், பிஜு ஜனதா தளத்தில் இன்று (ஏப்ரல் 7) இணைந்தார்.
ஒடிசா மாநிலத்தில் புருகு பாக்ஸிபத்ராவுக்குப் பிறகு பாஜகவிலிருந்து விலகி பிஜு தனதாவில் இணையும் இரண்டாவது பாஜக பிரமுகர் இவராவார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பிஜு ஜனதா தளம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லேகாஸ்ரீ சமந்தசிங்கர் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவின் மாநில தலைவர் மன்மோகன் சம்லாலுக்கு அவர் ராஜிநாமா கடிதத்தையும் எழுதியுள்ளார். கட்சியின் தலைமை மீது நம்பிக்கை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டு, கட்சியிலிருந்து விலகுவதாக லேகாஸ்ரீ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக லேகாஸ்ரீ சமந்தசிங்கர் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வளர்ச்சிக்காக வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தியுள்ளேன். என்னுடைய உண்மைத்தன்மைக்கும் உழைப்புக்கும் போதிய நம்பிக்கையை தலைமையிடம் நான் பெறவில்லை.
ஒடிசா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற என்னுடைய ஆசை தடைப்பட்டதால், இனி இங்கிருந்து செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதனால், பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன். இதுநாள் வரையில் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்காக பாஜகவுக்கு நன்றி எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.