தெலங்கானா அமைச்சர் மகனுக்கு சென்னை சுங்கத்துறை சம்மன்

தெலங்கானா அமைச்சர் மகனுக்கு சென்னை சுங்கத்துறை சம்மன்
Published on
Updated on
1 min read

பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரங்கள் கடத்தலில் ஈடுபட்டதாக தெலுங்கானா அமைச்சரின் மகன் பொங்குலேட்டி ஹர்ஷா ரெட்டிக்கு சென்னை சுங்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஹாங்காங்கைச் சேர்ந்த இந்தியரான முஹம்மது ஃபஹர்தீன் முபீனிடம் இருந்து ரூ.1.73 கோடி மதிப்பிலான இரண்டு உயர் ரக கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பிப்ரவரி 5 ஆம் தேதி கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். சுங்கத் துறையின் விசாரணையின்படி, இடைத்தரகர் அலோகம் நவீன் குமார் மூலம் ஹர்ஷா ரெட்டி, முஹம்மது ஃபஹர்தீன் முபீனிடமிருந்து கடிகாரங்களை வாங்கியவர் என அடையாளம் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் உயர் ரக கைக்கடிகாரங்கள் கடத்தலில் ஈடுபட்டதாக தெலுங்கானா அமைச்சரின் மகன் பொங்குலேட்டி ஹர்ஷா ரெட்டிக்கு சென்னை சுங்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஹர்ஷா ரெட்டி ஏப்ரல் 4 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதால் மருத்துவ ஆலோசனையின்படி, ஏப்ரல் 27 ஆம் தேதிக்குப் பிறகு சுங்கத் துறையின் முன் ஆஜராக அவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை இது முற்றிலும் ஆதாரமற்றது. தற்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என ஹர்ஷா ரெட்டி தெரிவித்துள்ளார். மார்ச் 28 தேதியிட்ட சம்மன் ஹைதராபாத்தில் உள்ள ஹர்ஷா ரெட்டி இயக்குநராக உள்ள ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. தெலங்கானா மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com