ரமலான் மாதத்தில் பிரியாணி விற்பனை: ஸ்விக்கி தகவல்!

ரமலான் மாதத்தில் ஸ்விக்கி வழியாக 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள்!
மாதிரி படம்
மாதிரி படம்Pixabay

ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி, ரமலான் மாதத்தில் ஏறத்தாழ 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வழக்கமான மாதங்களை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகமான பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான பிரியாணிகளும் 5.3 லட்சம் ஹலீம் ஆர்டர்களும் ஹைதராபாத்தில் பெறப்பட்டுள்ளன.

இப்தார் விருந்தில் முக்கிய அங்கமாக பாரம்பரிய உணவுகளான ஹலீம், சமோசா ஆகியவற்றுக்கு ஆர்டர்கள் குவிந்ததாகவும் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை 34 சதவிகிதம் அதிகமான ஆர்டர்கள் வந்ததாகவும் ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.

ஃபிர்னி, மால்புவா, ஃபலூடா, டேட்ஸ் ஆகியவற்றுக்குமான ஆர்டர்களும் அதிகமாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.

ரமலானின் இனிப்புகளை அதிகமாக விரும்பும் பட்டியலில் மும்பை, ஹைதராபாத், கல்கத்தா, லக்னெள, போபல் மற்றும் மீரட் இடம்பெற்றுள்ளதாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com