இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி: கே.கவிதா

இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி: கே.கவிதா

இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி என்று தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

பின்னா், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றக் காவலில் தில்லி திகாா் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில் இவ்வழக்கில் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கே.கவிதா நீதிமன்ற வளாகத்தில் கூறுகையில், இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி. பாஜக வெளியில் என்ன பேசுகிறதோ, அதையே சிபிஐ உள்ளே கேட்கிறது.

2 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் கேட்கிறது, புதிது இல்லை". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com