
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உத்தம் லால் செளத்ரியை ஆதரித்து கதுவா பகுதியில் சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஜம்மு மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராமன் பள்ளாவை ஆதரித்து ஆர்.எஸ். புரா பகுதியில் பேரணியில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், பாஜக ஆட்சியால் மக்கள் நம்பிக்கையிழந்து சோர்ந்துவிட்டதாகவும், அவர்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை காங்கிரஸ் ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், பாஜகவை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.