சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் படம் | ஏஎன்ஐ

சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தார் மக்களவை தொகுதிக்கு வெள்ளியன்று(ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

வாக்குப்பெட்டிகள், விவிபேட் கருவிகள் ஆகியவை ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், தேர்தல் அலுவலர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருகின்றனர் என்றும் பிஜப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார்.

நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய ஆயுதப்படை, மாநில ஆயுதப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com