
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. வதோதரா - அகமதாபாத் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நடுவழியில் பழுது ஏற்பட்டதால் டேங்கர் லாரி சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், லாரியின் பின்பக்கத்தில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் மோதியதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரிலிருந்து படுகாயங்களுடன் மீடகப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.