அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி
அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

நாடு முழுவதும் ராம நவமி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் கண்கொள்ளா காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்வின்போது கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம ராம என்ற கோஷத்துடன் அரிய நிகழ்வை தரிசித்தனர். இந்த காட்சியை ஊடகங்கள் வாயிலாகவும் ஏராளமான ராம பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டு ராமநவமி இன்று கொண்டாடப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் முறையாக ராம நவமி கொண்டாடப்படுவதன் முக்கியத்துவத்தை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில் சூரிய திலகம் நிகழ்வு இன்று 12.16 மணிக்குத் தொடங்கி 12.21 மணி வரை நீடித்தது.

இந்த அரிய நிகழ்வானது, ஆன்மிக ரீதியாகவும் அதே வேளையில், அறிவியல், கட்டட அமைப்பு ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல சில வினாடிகள் படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி நாளில் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர் மீது சரியாக நெற்றியில் நான்கு நிமிடங்கள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த சிறப்பான செயல்முறை அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று தளங்களைக் கொண்டிருப்பதால், மூன்று தளங்கள் வழியாக சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் கட்டடக்கலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமநவமி நாளில் சூரியக் கதிர்களை விட, மிகப்பெரிய வாழ்த்து பாலராமருக்கு வேறு என்னவாக இருந்துவிடப் போகிறது என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். அதிலும், மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் தரிசனத்தை கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் ராம ராம என்ற கோஷத்துடன் தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com