அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம் எப்போது?

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை
அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை

நாடு முழுவதும் ராம நவமி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் இன்று மிகச் சிறப்பான நாளாக மாற்றும் மற்றொரு நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.

இந்த ஆண்டு ராமநவமி இன்று கொண்டாடப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் முறையாக ராம நவமி கொண்டாடப்படுவதன் முக்கியத்துவத்தை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில் சூரிய திலகம் நிகழ்வு இன்று 12.16 மணிக்குத் தொடங்கி 12.21 மணி வரை நீடிக்கவிருக்கிறது.

இன்று நடந்த அபிஷேக ஆராதனை

அறிவியல், கட்டடவியல் அனைத்தும் ஒன்றிணைத்து, ஆன்மிகச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில், ராம நவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, காணக் கிடைக்காத இந்த சூரிய திலக தரிசனம் கிடைக்கவிருக்கிறது.

ஆன்மிக ரீதியாகவும், அதே வேளையில், அறிவியலுடன், கட்டட அமைப்பும் ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி நாளில் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர் மீது நான்கு நிமிடங்கள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தளத்திலிருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ராமநவமி நாளில் சூரியக் கதிர்களை விட, மிகப்பெரிய வாழ்த்து பாலராமருக்கு வேறு என்னவாக இருந்துவிடப் போகிறது என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். அதிலும், மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com