மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் உள்ள தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றன.
மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!
-

மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் உள்ள தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றன.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்த வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதில் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!
சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

மணிப்பூரின் ஒரு சில இடங்களில் அமைதியின்மை நிலவுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தோங்ஜு சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், லுவாங்சங்பாம் மாமாங் லைகாயில் வாக்களித்தார். மாநிலத்தின் பழங்குடி மக்களைக் காப்பாற்றவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com