நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

நாக்பூர் தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நாக்பூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் 5 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் கட்கரி தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்களுடன் நகரின் மஹால் பகுதியில் உள்ள டவுன்ஹாலில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் நிச்சயம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா.

நாட்டில் உள்ள மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன், அது அவர்களின் பொறுப்பாகும். கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும், இம்முறை அது 75 சதவீதமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார். நாக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து கட்கரி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்ரே களமிறங்குகிறார்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், நாக்பூரில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் ஆதரவிற்கு நன்றி. வெயிலிலும் மழையிலும் பாஜகவினர் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றினர். இன்று, சாவடியில் குடிமக்கள் மற்றும் ஆர்வலர்களை சந்தித்த பிறகு, நாங்கள் நிர்ணயித்த இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்று நம்புகிறேன் என்றார். நாக்பூரைத் தவிர, கட்சிரோலி-சிமூர், பந்தாரா-காண்டியா, சந்திராபூர் மற்றும் ராம்டெக் ஆகிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com