அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தது யார்?

அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார் ஜெ.பி. நட்டா.
அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தது யார்?

அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜெ.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி என்றுமே ராமருக்கு எதிரானது, சனாதனத்துக்கு எதிரானது. திருப்திப்படுத்தும் அரசியலையும், வாக்கு வங்கி அரசியலையும் மட்டுமே காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.

முன்பு சாதி, மதம், கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகள் என்ற நிலையில் அரசியல் இருந்தது. அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர் பிரதமர் மோடி. தனது அரசியலை நாட்டின் வளர்ச்சியை நோக்கி இணைத்தார். அனைத்து துறை வளர்ச்சியிலும் மோடி கவனம் செலுத்துகிறார்.

அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தது யார்?
சூரத் எம்.பி.யாக பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

சனாதனம் என்பது டெங்கு, மலேரியாவைப் போன்றது என்றார் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின். அதே கட்சியை சேர்ந்த எம்.பி. ஆ. ராசா சனாதனத்தை எச்.ஐ.வி. என்றார். ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி என எனைவரும் மெளனம் காத்தனர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கப்போகிறீர்களா? என ஜெ.பி. நட்டா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com