நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

நிழலில்லா நாள் இன்று பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நேரத்தை ஆய்வு செய்த மாணவர்கள்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நேரத்தை ஆய்வு செய்த மாணவர்கள்.

பெங்களூரு நகரில் இன்று நிழலில்லா நாள் நகரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நிழலில்லா நாளில், ஒரு சில வினாடிகள், வெளியே நிற்கும்போது, நமது நிழல் மண்ணில் விழாது. அந்த நிகழ்வானது, பெங்களூருவில் இன்று பகல் 12.17 மணி முதல் 12.23 வரை நீடித்தது.

பெங்களூருவின் அட்சரேகையில் வரும் பகுதிகளிலும் இன்று நிழலில்லா நாள் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு மையத்தில் செங்குத்தாக சூரிய கதிா் விழும் தினத்தில் நிழல் தெரியாது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இதுபோன்று நிகழும். அப்போது, ஒரு பொருளின் மேல் விழும் சூரியஒளியானது, அப்பொருளின் பரப்புக்குள்ளேயே நிழலை விழச் செய்கிறது. இந்த நிகழ்வு நிழலில்லா தினம் அல்லது பூஜ்ய நிழல் தினம் என அழைக்கப்படுகிறது.

நிகழாண்டு இந்த நிகழ்வானது பெங்களூருவில் பகல் 12.17 மணிக்குத் தொடங்கியது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெளியில் நின்று, நிழல் விழாமல் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

பெங்களூருவைப் போலவே, கன்னியாகுமரி, போபால், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் நிழலில்லா நாள் தெரியவரும் நாள்கள் வரவிருக்கின்றன.

அதுபோல கன்னியாகுமரியில் ஏப்ரல் 10 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதியும் பெங்களூருவில் ஏப்ரல் 24, ஆகஸ்ட் 18ஆம் தேதியும் ஹைதராபாத்தில் மே 9 மற்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதியும் நிழலில்லா நாள் நிகழும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com