சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அநீதி இழைக்கப்பட்ட 90 சதவீத மக்களுக்கு நீதியை உறுதி செய்வதே தனது வாழ்க்கையின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்
Published on
Updated on
1 min read

தங்களை தேசபக்தர் என்று செல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கண்டு பயப்படுகிறார் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தாக்கி பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் உள்பட ஒருசில மாநிலத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், சமாஜிக் நியாய சம்மேளனத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி.

சாதிவாரிக் கணக்கெடுப்புதான் எனது வாழ்க்கையின் நோக்கம் நான் இதை விட மாட்டேன் என்று அவர் தெரிவித்தார். அநீதி இழைக்கப்பட்ட 90 சதவீத மக்களுக்கு நீதியை உறுதி செய்வதே தனது வாழ்க்கையின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மேலும், பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியில் 90 சதவீத இந்தியர்களுக்கு ஒரு சிறு பகுதியை திரும்ப வழங்குவது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com