'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

"மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து விட்டதால் காங்கிரஸை அவா்கள் விமசித்து வருகிறாா்கள்
'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும்  இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

புது தில்லி: காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் கடைகோடி கிராம மக்களையும் சென்றடைந்துள்ளதால் அச்சமடைந்துள்ள பாஜக மீண்டும் திரித்தல், அப்பட்டமான பொய்கள் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பழைய தந்திரங்களின் வலையில் விழுந்துவிட்டது என்றும் "மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து விட்டதால் காங்கிரஸை அவா்கள் விமசித்து வருகிறாா்கள் என வியாழக்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துகளைப் பகிந்தளித்துவிடும்’ என்று குறிப்பிட்டார். ‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், ‘இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று காங்கிரஸின் தோ்தல் அறிக்கையைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி விமர்சித்தாா்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரதமரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தோ்தல் விதிமுறைகளை மீறிய பிரதமா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தோ்தல் ஆணையத்தில் அளித்த புகாா் குறித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் முனைப்பு காட்டாததைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தோதல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும்  இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு
மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமா் விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தொடா்ந்து மெளனம் காப்பது துரதிருஷ்டவசமானது’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டாா்.

இந்த நிலையில், பிரதமரின் சாட்சி பேச்சுக்கு எதிரான புகாரை தோ்தல் ஆணையம் ஆராயத் தொடங்கியுள்ளது என்று ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்த நிலையில், “2024 காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் கடைகோடி கிராம மக்களையும் சென்றடைந்துள்ளதால் அச்சமடைந்துள்ள பாஜக மீண்டும் திரித்தல், அப்பட்டமான பொய்கள் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பழைய தந்திரங்களின் வலையில் விழுந்துவிட்டது" என்றும் 'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து விட்டதால் காங்கிரஸை அவா்கள் விமசித்து வருகிறாா்கள் என வியாழக்கிழமை முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

"2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கடைகோடி கிராம மக்களையும் சென்றடைந்துள்ளது, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது".

தேர்தல் அறிக்கை மதம் சார்பற்றது என்றும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்குவதாக உறுதியளிக்கிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

இதனிடையே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துக்களைப் பகிந்தளித்துவிடும்’ என்றும் ‘இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ மற்றும் ‘பரம்பரை வரி’ இதுவரை தயாரிக்கப்பட்ட அப்பட்டமான பொய்கள் பாஜகவை பிடித்துள்ள அச்சமாகும்.

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும்  இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு
அரசுப் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்ததில் நடத்துநா் பலத்த காயம்

காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்குத் தரும் அல்லது நீண்ட காலமாக ரத்து செய்யப்பட்ட பரம்பரை வரி பற்றி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதா? காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் நீங்கள் அதைப் படித்தீர்கள்?" என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

1985-இல் காங்கிரஸ் அரசால் எஸ்டேட் வரி ரத்து செய்யப்பட்டது, 2015 -இல் பாஜக அரசாங்கத்தால் 'செல்வ வரி' ரத்து செய்யப்பட்டது" என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறேன்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை "வேலை, செல்வம் மற்றும் நலன்" என்ற மூன்று மந்திர வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டது."வேலை என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு அதிக வேலைகளை உருவாக்குவோம்.

செல்வம் என்பது செல்வத்தை உருவாக்கும் மற்றும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கும் கொள்கைகளை பின்பற்றுவது.

நலன் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பது என்று அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டதால் "துரதிர்ஷ்டவசமாக 'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டதால் பயமடைந்துள்ள பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், மீண்டும் திரித்தல், அப்பட்டமான பொய்கள் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பழைய தந்திரங்களின் கற்பனைக் கதைகளை உருவாக்கி விழுந்துவிட்டது" என்று அவர் கூறினார்.

பாஜகவின் ஆபத்தான மற்றும் பிளவுபடுத்தும் விளையாட்டைப் பார்த்து வரும் மக்கள், 1991 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்ததைப் போல, 2024 இல் வளர்ச்சி, சமத்துவம் மற்றும் நீதியின் சகாப்தத்தை உருவாக்கும் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புவதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com