ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு இவிஎம்மின் ‘பீப்’ ஒலி பதிலளிக்கும் என்றார் அனுராக் தாக்குர்.
ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

ஒளரங்கசீப் சிந்தனைப் பள்ளியில் ராகுல் காந்தியும், ஓவைசியும் பயிற்சி பெற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார்.

மேலும், இவர்கள் இருவரின் வார்த்தைகளில் மட்டுமே ஜனநாயகம் இருப்பதாகவும், மனதிலும் இதயத்திலும் ஷாரியா சிந்தனையே இருப்பதாகவும் அனுராக் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக தலைவர்கள் விமர்சிப்பதும், அதற்கு காங்கிரஸ் பதிலடி தருவதும் தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா வேட்புமனு தாக்கல் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்குர் பேசியதாவது:

“ராகுல் காந்தி ஒவைசியின் ‘பி’ அணியா அல்லது ஒவைசி ராகுல் காந்தியின் ‘பி’ அணியா? ஒவைசியின் வகுப்புவாத அரசியலை பரப்புபவரா ராகுல் காந்தி? இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் வெளிப்படுகிறது.

அமேதியில் பெண்ணால் தோற்கடிக்கப்பட்டவர் ராகுல் காந்தி. ஹைதராபாத்தில் ஒவைசியும் பெண்ணால் தோற்கடிக்கப்படுவார். பாஜக வேட்பாளர் மாதவி லதா

தேர்தல் களத்தில் இறங்கியதில் இருந்து ஒவைசியை காணவில்லை.

போலி வாக்குகள் மூலம் பலமுறை ஒவைசி வெற்றி பெற்றுள்ளார். தற்போது அது தடுக்கப்பட்டுள்ளது, ஒவைசி கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்தனர், திறப்பு விழா அழைப்பை நிராகரித்தனர். இதுபோன்ற மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு இவிஎம்மின் ‘பீப்’ ஒலி பதிலளிக்கும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com