பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோரில் இரண்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பாதுகாப்புப்டையினர் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. இருதரப்பிலும் நேற்று இரவு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை இன்று காலை வரை நீடித்தது.

இந்த சம்பவத்தில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக வியாழன் அன்று, பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து உரி, பாரமுல்லா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com