மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு குக்கி பழங்குடிகள் நடத்திய வன்முறை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மணிப்பூர்: மணிப்பூரில் உள்ள நரன்சேனா பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடத்திய வன்முறை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) வீரர்கள் இருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மார்ச் 2023-ல் உயர்நீதிமன்றம், மைதேயி பழங்குடிகளை பட்டியலின பிரிவில் சேர்க்க மாநிலத்துக்கு பரிந்துரைத்தது.

இந்த வழிகாட்டல் மணிப்பூரில் மைதேயி மற்றும் குக்கி பழங்குடிகள் இடையே பெரிய கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. கலவரத்தில் ஏறத்தாழ 200 பேர் பலியாகினர்.

இந்த நிலையில்,மணிப்பூரில் உள்ள நரன்சேனா பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி குக்கி பழங்குடிகள் நடத்திய வன்முறை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) வீரர்கள் இருவர் உயிரிழந்ததாகவும்,காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மணிப்பூர் மாநிலம், பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்சேனாவில் குக்கி பழங்குடியினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2.15 மணி வரை வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் உயிரிழந்தனர்.

வெடிகுண்டு தாக்குதலில் நான்கு மத்திய ரிசர்வ் படை போலீசார் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோப்புப்படம்
பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

உயிரிழந்தவர்கள் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

இதற்கிடையே, மணிப்பூர் தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைக்கான தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தலில் மணிப்பூரில் அதிக வாக்குப்பதிவு மற்றும் குறைந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த அதிக அளவில் வந்ததாகவும்,ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயலிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது மற்றும் பெரிய அசாம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாகவும் "ஒரு மணி நேரத்திற்கு முன்பு எங்களுக்கு கிடைத்த கடைசி அறிக்கையின்படி, 75 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.

2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, மணிப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து, ஏப்ரல் 22 ஆம் தேதி மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மக்களவைக்கான ஏழு கட்ட பொதுத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 62 சதவீதத்திற்கு மேல் பதிவாகியுள்ளது.

அடுத்த கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com