குஜராத்: பிரதமர் மோடியைப் போல தோற்றமளிக்கும் பானி பூரி விற்பனையாளர்

நன்றி: என்டிடிவி

நன்றி: என்டிடிவி
குஜராத்தில் பானி பூரி விற்பவர் பிரதமர் மோடியின் தோற்றத்தில் இருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், ஆனந்தில் துளசி பானி பூரி கடை வைத்திருப்பவர் அனில் பாய் தக்கர்(71). ஜூனாகத்தை சேர்ந்த இவர் தனது 18 வயதில் இருந்து பானி பூரி விற்று வருகிறார். அவர் பார்ப்பதற்கு பிரதமர் மோடியைப் போல் தோற்றமளிப்பதால் அப்பகுதியில் பிரபலம் அடைந்துள்ளார்.
அவரது சிகை அலங்காரம் மற்றும் வெள்ளை தாடியும் பிரதமர் மோடியுடன் பொருந்துகிறது. இதனால் அவரை உள்ளூர் மக்கள் பிரதமர் மோடி என்று அழைக்கின்றனர். இதுகுறித்து அனில் பாய் தக்கர் கூறுகையில், தனது தோற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தன்னுடன் வந்து அடிக்கடி சுயப்படம் எடுத்து செல்கிறார்கள்.
பிரதமர் மோடியை போன்று உருவ அமைப்பு இருப்பதால் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைத்துள்ளது. பிரதமரின் கொள்கைகளால் தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அவர் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவே, தானும் தன்னுடைய கடையையும் தூய்மையாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...