மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மணிப்பூரின் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களின் கிராம தன்னார்வலர்களுக்கு இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காங்போக்பி மாவட்டத்தின் அருகிலுள்ள கவுட்ரூர் கிராமத்தின் மீது பல ஆயுதமேந்திய கிராமத் தொண்டர்கள் இன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு ஆயுதமேந்திய கிராமத் தொண்டர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். துப்பாக்கிச் சண்டையால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த சண்டையின்போது 'பம்பி' எனப்படும் நாட்டு மோட்டார் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதால் குடியிருப்பவாசிகள் மிகுந்த அச்சமடைந்தனர். சில குண்டுகள் கிராமவாசிகளின் வீடுகளின் சுவர்களைத் துளைத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினரின் பெரும் குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

சனிக்கிழமை அதிகாலை பிஷ்னுபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் முகாம் மீது ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியதில், காவல் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் பலியாகினர், மேலும் இருவர் காயமடைந்தனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் முழுமையாக அமைதி திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com