அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குருக்கு எதிராக சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

திருவனந்தபுரம்: ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குருக்கு எதிராக சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில்,ஏப்ரல் 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் நரேந்திர மோடி கூறிய அதே பொய்யை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான அனுராக் தாகூர் போலியான செய்திகளை பரப்பி பொய் பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.”

வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் தொடர் பொய் பிரசாங்களில் ஈடுபட்டு வரும் அனுராக் தாக்குர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய யெச்சூரி, இல்லையெனில்,"சுதந்திரமான மற்றும் நியாயமான' தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் திறன் மீதான மக்கள் முழு நம்பிக்கையை இழக்கும் முன்பு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதற்கு முன்பு, இத்தகைய வன்முறை வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் பிரசாரங்களில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது," என்று அவர் கூறினார். நேரிடும் என்று கூறியுள்ளார்.

சீதாராம் யெச்சூரி
யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

மேலும் தாக்குர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு,தேர்தல் நடத்தை விதிகளின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை தூண்டி,தேர்தல் சூழலைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து, "பாஜகவின் பல தலைவர்கள் இப்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், முஸ்லிம்களுக்கு எதிரான துரோகங்களைப் பயன்படுத்தி தங்கள் உயிருக்கும் செல்வத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள்."

இதுபோன்ற தேர்தல் விதி மீறல்களை சுட்டிக்காட்டி முக்கியமாக ஊடகங்கள் புகாரளித்த போதிலும், தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த மறுத்திருப்பது வருந்தத்தக்கது. தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அரசியல் கட்சிகள் மற்றும் மற்றும் சிவில் சமூக குழுக்கள், தனிநபர்களிடம் இருந்து புகார்கள் குவிந்த பிறகுதான்,பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் கட்சியின் தலைவருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றார்.

“பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்குர் மற்றும் பாஜக தலைவர்கள் பேசிய வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள் மீதான புகாா்களை தோ்தல் ஆணையம் பாரபட்சமின்றி பரிசீலித்து,நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் இதுபோன்ற தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடுவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறின்றி,தேர்தல் ஆணையம் உறுதியாக செயல்படாவிட்டால், ஆணையத்தின் மீதான திறன் மீதான மக்களின் முழு நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com