தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

தப்பிக்க வழியே இல்லை எனும் அளவுக்க தமிழகத்தில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

நாட்டில் தமிழகம், மேற்குவங்கம், பிகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், மிக மோசமான வெப்ப அளவே நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, பிகார், ஜார்க்கண்டில் ஒரு சில பகுதிகளில் மே 1ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும், அதன்பிறகு, மே 2ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியா

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகம், புதுசசேரி, உள் கர்நாடகம், கோவா, ராயலசீமா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், மேற்கு வங்கத்தின் கங்கை ஆற்றுப் பகுதிகளில் பல நாள்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒடிசாவின் பல பகுதிகளிலும் கடும் வெப்பஅலை வீசும் நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக வடக்கு ஒடிசா பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசுவதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com