மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

விஜயவாடா குடும்பம் உயிரிழப்பு
மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

விஜயவாடாவில் மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்த நிலையில் அவர்களின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காவலர்கள் தெரிவித்தனர்.

எலும்பியல் மருத்துவரான டி.ஸ்ரீநிவாஸ், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் படமடா பகுதியில் உள்ள அவர்களின் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு வேலைக்கு வந்த பெண் முதலில் இவர்களை கண்டதாகவும் பின்னர் பக்கத்து வீட்டில் உள்ளோர்களுக்கும் காவலர்களுக்கும் தகவல் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீநிவாஸ் வீட்டின் பால்கனி பகுதில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். மற்ற நால்வரும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என காவலர்கள் தெரிவித்தனர்.

உடற்கூராய்வுக்கு உடல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீநிவாஸ் புதிதாக மருத்துவமனை தொடங்கியதாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் மருத்துவமனையை விற்றதாகவும் பண பிரச்னையால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனவும் காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com