
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மகாராஷ்டிரத்தின் புணேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் (ஜூலை 28) வீட்டில் தனியாக இருந்த 14 வயதான சிறுமியை, சிறுமி படித்த பள்ளியின் அலுவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்; ஆனால், அவரை சிறுமி தடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவிருந்ததை, வெளியில் சொல்லி விடுவார் என்ற பயத்தில், சிறுமியை பூச்சி மருந்தை குடிக்க வைத்துள்ளார் பள்ளி அலுவலர்.
இதனையடுத்து, வீட்டிற்கு வந்த சிறுமியின் குடும்பத்தினரிடம், நடந்தவற்றை அனைத்தையும், கூறியநிலையில், சிறுமியை சோலாப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சையில் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்த நாளிலேயே, பள்ளி அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.