20 நாள்களில் பிஎஸ்என்எல்-க்கு ஹலோ சொன்ன 80 ஆயிரம் புதிய பயனர்கள்!

கடந்த 20 நாள்களில் பிஎஸ்என்எல்-க்கு 80 ஆயிரம் புதிய பயனர்கள் மாறியிருக்கிறார்கள்.
பிஎஸ்என்எல் அலுவலகம்
பிஎஸ்என்எல் அலுவலகம்Center-Center-Tiruchy
Published on
Updated on
1 min read

தமிழகத்தில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், செல்ஃபோன் ரீசார்ஜ் கட்டணங்களை போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தியதால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் மக்கள்.

தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது மாதக் கட்டணங்களைக் குறைத்த நிலையில் புதிதாக 80 ஆயிரம் பயனர்கள் இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் கடந்த 20 நாள்களில், புதிதாக 80 ஆயிரம் பேர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்திலேயே, ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தி மக்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தன. இதனால், தங்களுக்குக் கட்டுபாடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை மக்கள் தேடிக்கொண்டிருந்தபோதுதான், மின்னல் போல ஒரு செய்தி வெளியானது. அது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணக் குறைப்பு செய்தி.

பிஎஸ்என்எல் அலுவலகம்
ராணுவ மருத்துவ சேவை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நியமனம்

இதனால், தேடிக்கொண்டிருந்த மக்களுக்கு இதோ இருக்கிறேன் என பிஎஸ்என்எல் நிறுவனம் மாறியது. தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். புதிய சிம்கார்டு வாங்கினர். ஏற்கனவே தாங்கள் பயன்படுத்திய வந்த எண்களைக் கொடுத்து அதையே பிஎஸ்என்எல் எண்ணுக்கு மாற்றிக்கொண்டனர்.

ஒருபக்கம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்ததோடு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறும் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. இது டபுள் ஆஃபராக மாறியது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு.

பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து மாறுவோர் எண்ணிக்கை 6.29 சதவீதத்திலிருந்து 0.4 சதவீதமாகக் குறைந்தது. சென்னை மட்டுமல்லாமல், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இந்த நிலையே நீடித்தது. மதுரையில் மட்டும் சுமார் 10000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். திருச்சியில் 16 ஆயிரம் பேர் புதிய சிம் வாங்கியிருக்கிறார்கள் என்கின்றன தரவுகள்.

இவ்வாறு கடந்த 20 நாள்களில் மட்டும் சென்னையில் பிஎஸ்என்எல் சிம் பெற்றவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரமாக உள்ளது. தற்போதைக்கு கட்டண உயர்வுக்கான திட்டமில்லை, வணிகத்தை விரிவுபடுத்துவதே எண்ணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com