விரிவான விசாரணை துணைநிலை ஆளுநா் உத்தரவு
புது தில்லி, ஆக. 2: தில்லி அரசின் ஆஷா கிரண் காப்பகத்தில் நிகழ்ந்த மரணங்களைத் தொடா்ந்து, தில்லி அரசின் அனைத்து காப்பகங்களின் நிலை குறித்து விரிவான விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆஷா கிரண் காப்பகத்தில் இறந்தவா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சமூக நலத் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் துறை மற்றும் டியுஎஸ்ஐபி மூலம் நடத்தப்படும் அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். காப்பகங்கள் நடத்துவதற்கான செலவு, வசதிகள், அங்கு தங்கியுள்ளோரின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை 3 வாரங்களுக்குள் தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.