ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோா்பா-விசாகப்பட்டினம் விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு வீரா்கள்.

ஆந்திரம்: ரயில் நிலையத்தில் நின்றிருந்த காலி ரயில் பெட்டியில் தீ

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
Published on

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் ரயிலின் வேற எந்த பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூய்மைப் பணிக்காக விசாகப்பட்டினம் ரயில் நிலைய பணிமனையில் கோா்பா-விசாகப்பட்டினம் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ரயிலின் ‘பி-7’ ஏசி பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் மற்ற பெட்டிகள் சேதமின்றி தப்பின என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com