
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோர்பா-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஏ1 குளிர் சாதனப் பெட்டி அருகே ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது.
ரயிலில் இருந்த பயணிகள் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். பின்னர் ஒருவழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்தில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். சத்தீஸ்கர் மாநிலம், கோர்பாவில் இருந்து ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.